Monday, December 12, 2011

அரசு உயர் நிலை பள்ளியாக மாறியது! ! ! !

நமது ஊரின் மிக பெரும் பழைமை வாய்ந்த பள்ளியான ஊ. ஒ.ந. பள்ளி (அதாவது :ஊராச்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ) தற்போது அரசு உயர் நிலை பள்ளி யாக பதவி உயர்வு பெற்று உள்ளது. தற்போது 8th வகுப்பு வரை உள்ளது. அரசு உயர் நிலை பள்ளி யாக மாறும் போது, 10th வகுப்பு வரை நமது ஊரிலேயே படித்து கொள்ளலாம்.

இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வருடம் அல்லது அதற்கு அடுத்த வருடம் வெளியாகும் என தெரிகிறது.



Friday, October 28, 2011

கூட்டு குர்பானி தொடர்புக்கு

நமது ஊரில் சென்ற வருடம் போல் இந்த வருடமும் கூட்டு குர்பானி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கூட்டு குர்பானில் சேர விரும்பும் சகோதரர்கள் தங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். 

ஒரு பங்கின் விலை RS 1000/-

தொடர்புக்கு :

செய்யது 
9942449265

Sunday, October 23, 2011

வெற்றி தோல்வி என்பது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வருவதாகும் !

நடந்து முடிந்த ஊராச்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டயிட்ட செய்யது ஒரு சில வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். வெற்றி தோல்வி என்பது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வருவதாகும். ஆகவே அவருக்கு பொறுமையை தந்து இனி வரும் காலங்களில் அவருக்கு மிகபெரும் வெற்றியை கொடுபதற்க்கு அல்லாஹ்விடம் துஆ செய்வோம் . 

நமது ஊர் ஒரு சில மக்களின் புரியாமையின் காரணமாக நம் சகோதரர் பெற வேண்டிய வெற்றி மாற்று மத சகோதருக்கு சென்று விட்டது. இதனால் நமது ஊர் மக்களுக்கு கிடைக்க போகும் நன்மைகள் என்ன ? ? ? ? ? ? நிச்சயாமாக ஒன்றும் இருக்காது......

ஏன் என்றால், அவர் அவருடைய மக்களுக்கு செய்வதற்கு நினைப்பாரா ? அல்லது நம் மக்களுக்கு செய்வதற்கு நினைப்பாரா ? ஏதேனும் நமது ஊருக்கு தேவைகள் இருந்தால், பள்ளிவாசல் பக்கத்தில் இருக்கும் செய்யது இடம் சொல்வது சுலபமா ? அல்லது லாஞ்சியடி-யை தாண்டி இருக்கும் சினையன்- இடம் சொல்வது சுலபமா ? 

செய்யது கு ஆதரவாக வேலை செய்பவர்களிடம், எதிராக வேலை செய்தவர்கள் கேட்ட கேள்வி " நீங்கள் ஏன் கவுன்சிலர் ஹபிபுல்லாஹ் அவரை ஆதரிக்கவில்லை ? அவரும் நமது சமுதாய சஹோதரர் தானே " என்று. சகோதரர்களே ! ! ! நன்றாக புரிந்தது கொள்ளுங்கள். கவுன்சிலர் பதவியை பொறுத்த வரையில் "செய்யானம்" பகுதி நமது கீலமஞ்சகுடி ஊராச்சி இல் இணைந்தது. ஆகவே நாம் வெற்றி பெற வேண்டும் என்றால், செய்யானம் மக்கள் முழுவதும் நமக்கு ஓட்டு அளிக்க வேண்டும் அல்லது கிராமம் முழுவதும் நமக்கு ஓட்டு அளிக்க வேண்டும் அல்லது லாஞ்சியடி முழுவதும் நமக்கு ஓட்டு அளிக்க வேண்டும் ( மதுரை ஓட்டு உட்பட ) இது சாத்தியமா ? ? ? ?
படிக்காத பாமரருக்கு கூட தெரியும் நிச்சயாமாக முடியாது என்று. 

இதில் மிகப்பெரிய வேடிக்கை அல்லது வேதனை என்ன வென்றால், ஜெகத பட்டினம் லாஞ்சியடி ஒப்பந்த படி, கவுன்சிலர் பதவிக்கு போட்டயிட்ட ஹபிபுல்லாஹ் வெறும் சொற்ப வாகுகள் பெற்று உள்ளார், இதன் மூலமாக நாம் அறிவது என்ன வென்றால், லாஞ்சியடி ஓட்டு அவருக்கு விழவில்லை. அவர்கள் ஒப்பந்தத்தை மதிக்கவும் இல்லை, ஓட்டு போடவும் இல்லை.

மேலும் ஆச்சர்யமான உண்மை,  செய்யது மார்க்க பணி மற்றும் சமுக பணி செய்து வந்தாலும், வெறும் சொற்ப வாக்குகள்  மட்டுமே பெறுவார் என்று அனைவராலும் பேசப்பட்டு வந்த செய்யது வெற்றி இன் விளிம்பு வரை சென்று உள்ளார் என்று அணைத்து மக்களும் பேசி வருகிறார்கள், இதன் காரணமாக செய்யது அவரின் மதிப்பு மென் மேலும் உயர்ந்து உள்ளது.

நிச்சியமாக அல்லாஹ் நாட்டம் இல்லாமல் எதுவும் நடக்காது. ஆகவே செய்யது வெற்றிக்காக பாடு பட்ட நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக ! ! ! ! !

Wednesday, October 19, 2011

அமைதியான வாக்கு பதிவு ! வெற்றி யாருக்கு ?

கீலமஞ்சகுடி ஊராச்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. ஊராச்சி மன்ற தலைவர் பதவிக்கு மொத்தம் உள்ள 3270 வாக்குகளில் 2145 வாக்குகள் பதிவு ஆகி உள்ளது . 

ஆக குறைந்தது 575-610 வாக்குகள் பெரும் வேட்பாளர் வெற்றி பெறுவார். ஊராச்சி மன்ற தலைவர் பதவிக்கு மொத்தம் 4 வேட்பாளர் போட்டி இடுகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. 

Monday, October 17, 2011

பிரச்சாரம் ஓய்ந்தது ...நாளை மறுநாள் வாக்குபதிவு....

கீலமஞ்சகுடி ஊராச்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 19/10/2011 புதன் கிழமை நடக்க இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் கடந்த 20 நாட்கள் நடந்து இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. நாளை மறுநாள் வாக்குபதிவு நடக்க இருப்பதால், ஓட்டு உள்ள அனைவரும் தவறாமல் வந்து ஜெகதா பட்டினத்தின் ஜனநாயக கடமையை செலுத்துமாறு கேட்டு கொள்கிறோம். 

ஓட்டு பதிவை ஓட்டி ஊரின் முக்கிய பிரமுமுகர்கள், மற்றும் தலைவர்கள் ஊரில் முகாமிட தொடங்கி உள்ளனர்.

ஜெகதா பட்டினம் சகோதர்கள் கவனத்திற்கு !

உங்களுடைய பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைய தளத்தை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம் 



முதலில் உள்ள இணைய தளதில் லாஞ்சி அடி வாக்காளர்கள் பெயருடன் நமது ஊர் வாக்காளர்கள் பெயர் சேர்ந்து உள்ளது. ஆகையால் நமது ஊர் வாக்களர்கள் (லாஞ்சியடி LIST இல் உள்ளவர்கள் மட்டும் ) லாஞ்சியடி சென்று வாக்கு அளிக்க வேண்டும் என தெரிகிறது.

Tuesday, October 11, 2011

என்னை ஊராச்சி மன்ற தலைவர் ஆக்கினால் ! ! ! ! தேர்தல் வாக்குறுதிகள் ! ! ! !

ஊராச்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டிடும் S. செய்யது அபுதாகிர் ஆகிய நான் வெற்றி பெற்றால், ஜெகதா பட்டினத்தின் இறையாண்மையும், மக்களின் நம்பிக்கை ஆகியவறை பாதுகாப்பேன் என்று கூறி கீழே உள்ள அத்தனையும் செய்வேன் உறுதி மொழி அளிக்கிறேன்.


இப்படிக்கு,
மக்களுக்காக உழைக்க இருக்கும் தொண்டன்,








குறிப்பு : தேர்தல் வாக்குறுதிகளை கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கவும்.......

Friday, October 7, 2011

சூறாவளி பிரச்சாராம் ! ! ! ! !

கீலமஞ்சகுடி ஊராச்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு போட்டியிடும் செய்யது சூறாவளி பிரச்சாராம் மேற்கொண்டு உள்ளார். இவர் வீடு வீடாக, வீதி வீதி யாக வாக்குகள் சேகரிப்பில் ஈடு பட்டுள்ளார். இவருக்கு பூட்டு சாவி சின்னம் கொடுக்க பட்டு உள்ளது.

இதை போல் மற்ற மற்ற வேட்பாளர்கள், கவுன்சிலர் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டுள்ளார்

ஜியாவுதீன் அவரின் திருமண விழா ! ! !

இன்ஷா அல்லாஹ் வரும் October 09 Sunday நமது நண்பர் ஜியாவுதீன் ( S/o ஹாஜி முஹமது  ) ( நியாஸ் அவரின் சகோதரர்) அவருக்கு திருமணம் நடை பெற இருக்கிறது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு, அதை தொடர்ந்து நடை பெரும் விருந்திலும் கலந்து கொண்டு மணமக்கள் ஹக்கில் துஆ செய்யவும்.

இடம் :MKA நிஷா திருமண மண்டபம், கோட்டை பட்டினம்  
மணநாள் :09/10/2011 Sunday

Thursday, September 29, 2011

கீலமஞ்சகுடி ஊராச்சி - மொத்த வாக்காளர்களின் நிலவரம் !

கீலமஞ்சகுடி ஊராச்சி - மொத்த வாக்காளர்களின் நிலவரம்

லாஞ்சியடி - மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை (மொத்தமும் - மதுரை உட்பட ) - 1142
இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை  - 612
பெண்  வாக்காளர்களின் எண்ணிக்கை - 530
புதிதாக வாக்கு அளிக்க போவோர்களின் எண்ணிக்கை - 80

கிராமம் - மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 917 (  கீலமஞ்சகுடி, பெரியமஞ்சகுடி, சின்ன மஞ்சகுடி, மேல மஞ்சகுடி, டாஸ் மார்க் குடி, ஒய்ன் சாப் குடி எல்லா குடியும் உட்பட)
இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை  - 477
பெண்  வாக்காளர்களின் எண்ணிக்கை - 435
புதிதாக வாக்கு அளிக்க போவோர்களின் எண்ணிக்கை - 60

ஜெகதாபட்டினம் -   மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 1211
ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை  - 660
பெண்  வாக்காளர்களின் எண்ணிக்கை - 551
புதிதாக வாக்கு அளிக்க போவோர்களின் எண்ணிக்கை - 75

Tuesday, September 27, 2011

த மு மு க செய்யது வேட்பு மனு தாக்கல் ! ! ! !

கீலமஞ்சகுடி ஊராச்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு இன்று த மு மு க செய்யது வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து லாஞ்சியடி இல் இருந்து ஒருவரும் மற்றும் கிராமம் சார்பாக ஒருவரும் போட்டி இடுவார்கள் என தெரிகிறது. இவர் மனித நேய மக்கள் கட்சி சார்பாக போட்டி இடுகிறார் என தெரிகிறது.

Monday, September 26, 2011

முஹமது இர்பான் அவரின் திருமண விழா ! !

இன்ஷா அல்லாஹ் வரும் October 03 Monday நமது நண்பர் அபு (எ) அபுகுரைதா அவரின் சகோதரர் முஹமது இர்பான் அவருக்கு திருமணம் நடை பெற இருக்கிறது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு, அதை தொடர்ந்து நடை பெரும் விருந்திலும் கலந்து கொண்டு மணமக்கள் ஹக்கில் துஆ செய்யவும்.

இடம் :ஜெகதா பட்டினம் மணமகள் இல்லம்
மணநாள் :October 03 2011

 
இவருடைய திருமண புகைபடங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் திருமணத்திற்கு பிறகு இன்ஷா அல்லாஹ் பதிவு செய்யப்படும் 

ஜமால் முஹமது அவரின் திருமண விழா ! ! !

நமது ஊர் யாகூப் ஹசன் பேட்டை யை சேர்ந்த நண்பர் ஜமால் முஹமது (கேபிள் ரபீக் அவரின் மச்சினன்)  அவரின் திருமண விழா இன்ஷா அல்லாஹ் வரும் October 02 Sunday நடைபெற உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு, அதை தொடர்ந்து நடை பெரும் விருந்திலும் கலந்து கொண்டு மணமக்கள் ஹக்கில் துஆ செய்யவும்.


இடம் :மணமகள் இல்லம்
மணநாள் : October 02 Sunday

உள்ளாச்சி தேர்தலில் மும்முனை போட்டி உருவாகும் நிலை!

நடைபெற இருக்கும் உள்ளாச்சி தேர்தலில் கீலமஞ்சகுடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மும்முனை போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த 25/9/2011 Sunday சுமார் 4.30 மணி அளவில் தர்கா திடலில் நமது ஊர், கிராமம் மற்றும் லாஞ்சியடிமுக்கிய பிரமுமுகர்கள்  ஒன்றாக சேர்ந்து பொது தீர்மானம் உண்டாக்க கூடினார்கள். கிராமம் சார்பாக பேசியவர்கள் நிச்சியமாக இந்த முறை நாங்கள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டி இடுவோம் என்று கூறிவிட்டார்கள். லாஞ்சியடி சார்பாக பேசியவர்கள் ஜெகத பட்டினம் மற்றும் லாஞ்சியடி ஒப்பந்தம் அடிப்படையில் நாங்கள் தான் இந்த முறை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டி இட வேண்டும் என்று கூறிவிட்டார்கள். முடிவில் என்ற ஒரு முடிவும் எடுக்க படாமல் கூட்டம் களைந்து சென்றது. 

இந்நிலையில் அவர் அவர் தங்களுடைய நிலையை தெரிவித்து விட்டதால், இந்த முறை நமது ஜமாஅத் சார்பாக யார், எந்த பதவிக்கு போட்டி இடுவார்கள் என்ற முடிவு எடுக்க படாமல் உள்ளது.

Thursday, September 22, 2011

உள்ளாச்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

உள்ளாச்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்க பட்டுவிட்டதால்,  ஜெகதாபட்டினத்தில் வரவிற்கும் 5 வருடங்களுக்கு ஊராச்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர் யார் என்ற எதிர்பார்ப்பு கூடி உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் யார் யார் என்று வரவிருக்கும் 1 அல்லது 2 நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த தேர்தலில் பல பேருடைய பெயர் பரிசீலனையில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. .

Wednesday, September 7, 2011

S.S.A. சையது அபுதாகிர் அவரின் திருமண விழா !

 நமது ஊர் யாகூப் ஹசன் பேட்டை யை சேர்ந்த நண்பர் S.S.A. அலி அக்பர் அவரின் சகோதரர் S.S.A. சையது அபுதாகிர் அவரின் திருமண விழா இன்ஷா அல்லாஹ் வரும் September 11 நடைபெற உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு, அதை தொடர்ந்து நடை பெரும் விருந்திலும் கலந்து கொண்டு மணமக்கள் ஹக்கில் துஆ செய்யவும்.


இடம் :MKA நிஷா திருமண மண்டபம், கோட்டை பட்டினம்
மணநாள் :11/08/2011 Sunday

Friday, September 2, 2011

முஹமது பாரூக் அவர்களின் திருமண விழா !

இன்ஷா அல்லாஹ் வரும் September 11 Sunday நமது நண்பர் முஹமது பாரூக்  S/o ஜைனுல் ஆபுதீன் ( கபீர் & இத்ரிஸ் அவர்களின் சகோதரர் ) அவருக்கு திருமணம் நடை பெற இருக்கிறது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு, அதை தொடர்ந்து நடை பெரும் விருந்திலும் கலந்து கொண்டு மணமக்கள் ஹக்கில் துஆ செய்யவும்.

இடம் :ஜெகதா பட்டினம் மணமகள் இல்லம்
மணநாள் :11/08/2011 Sunday

 
இவருடைய திருமண புகைபடங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் திருமணத்திற்கு பிறகு இன்ஷா அல்லாஹ் பதிவு செய்யப்படும் 

Monday, August 29, 2011

நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள் ! ! ! ! !

எனது  அருமை நண்பர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள், அனைத்து உலக முஸ்லிம்கள் அனைவர்க்கும் இனிய  நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.


கடந்து சென்ற ரமளானில் நாம் செய்த அனைத்து நன்மையான காரியங்கள் அனைத்தையும் அல்லாஹ் பொருந்தி கொண்டு, இதை மறுமையின் வெற்றிக்கு ஒரு தயாரிப்பாக ஆக்கி அருள்வானாக !



Friday, July 22, 2011

ரமழான் ! ! புனித ரமழான் ! !

ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183




நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமைமிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான (கடமையான) நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

சகோதரர்கள் அனைவரும் இனிய ரமழான் வாழ்த்துக்கள் ! ! !

( மேலே உள்ள திருமறை குரான் படத்தை கிளிக் செய்து பார்க்கவும்)

Thursday, July 21, 2011

ஜெகதா பட்டினத்தில் இருந்து மருத்துவ மாணவர் இமாம் அலி!

நமது ஊரை சார்ந்த இமாம் அலி அவர் (அப்சல் மருமகன்) க்கு வேலூர் அரசு மருத்துவமனை கல்லூரில் படிக்க இடம் கிடைத்து உள்ளது. இவர் அரசு மருத்துவ கல்லுரி இல் படிக்கும் முதல் ஜெகதா பட்டினம்  சேர்ந்த மாணவன் என்ற பெருமை பெற்றுள்ளார். இவர் தர்கா தெருவை சேர்ந்த அபுல் ஹசன் அவர்களுடைய மகன் ஆவார்.


Monday, July 11, 2011

முஹமது அப்துல்லாஹ் அவர்களின் திருமண விழா புகைபடங்கள்!

குறிப்பு : புகைப்படங்கள் அனைத்தும் தானாக அடுத்த அடுத்த படங்களுக்கு செல்லும். ஆகையால் எதையும் கிளிக் செய்ய வேண்டாம்.


Thursday, June 30, 2011

மெஹ்ராஜ் தினம் !

நமது ஊரில் மெஹ்ராஜ் தினம் இன்று (30/06/2011) சிறப்பாக நடைபெற்று உள்ளது. முதலில் தன்னவார்வ தொண்டர்கள் குறைவாக இருப்பதால், எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டு, பின்னர் ஏகமனதாக தேங்காய் சோறு முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் இன்று (30/06/2011) பழைய பள்ளிவாசலில் தேங்காய் சோறு செய்யப்பட்டு, ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டு வழக்கமான உற்சாகத்துடன் இனிதாக நடைபெற்றது.

Monday, June 20, 2011

மௌலானா அபூபக்கர் சாஹிப் அவர்களின் கந்தூரி விழா !

மௌலானா அபூபக்கர் சாஹிப் அவர்களின் கந்தூரி விழா கடந்த வெள்ளி கிழமை இரவு வெகு விமர்சையாக நடந்து உள்ளது. கச்சேரி, ஆடல், பாடல், கச்சேரி நடைபெறும் போது ஏற்பட்ட சண்டை, அத்துடன் போலீஸ் தடி அடி, கூச்சல், குழப்பம், நம் சகோதர்கள் இடையே ஏற்பட்ட பிரிவினை என்று எந்தவித மாற்றமும் இல்லாமல், எல்லாவித சம்பவங்களும் நடந்து கந்தூரி விழா விமர்சையாக நடந்து முடிந்து உள்ளது.

இதில் வழக்கம் போல், அடி வாங்கியது நம்முடைய சகோதர, சகோதரர்கள் தான்.

Tuesday, June 7, 2011

மௌலானா அபூபக்கர் சாஹிப் அவர்களின் கொடி ஏற்றம் !

நமது ஊர் மௌலானா அபூபக்கர் சாஹிப் அவர்களின் கொடி ஏற்றம் இன்று (June 07 2011) நடைபெறுகிறது. இதை தொடர்ந்து கத்தம் மற்றும் கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெற போவதாக ஜெகதா பட்டினத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கிறது

Thursday, May 26, 2011

தலைவா............................

ஓடும் ரயிலை விட
வேகமாக ஓடும் தலைவா

பூமிபந்தை புரட்டிப்போடும்
ஆற்றல் பெற்ற தலைவா

சுனாமியில் ஸ்விம்மிங் அடிக்கும்
எங்கள் தலைவா



மெக்கின்டோஷ ஆப்பிளையே
கடித்து மிச்சம் வைத்த எங்கள் தலைவா

கிரகாம்பெல்லுக்கே மிஸ்டு கால் கொடுத்த
எங்கள் தலைவா

உனது நுரையீரலும்
என்னைப்போலத்தானா?
உனக்கும் தேவைப்படுமா
மருத்துவ சிகிச்சை?

Tuesday, May 17, 2011

முஹமது அப்துல்லாஹ் அவர்களின் திருமண விழா !

இன்ஷா அல்லாஹ் வரும் மே 22 sunday நமது நண்பர் முஹமது அப்துல்லாஹ் S/o அப்துல் காதர் ( நைனா முஹமது & பிலால் முஹமது அவர்களின் சகோதரர் ) அவர்களுக்கு திருமணம் நடை பெற இருக்கிறது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு, அதை தொடர்ந்து நடை பெரும் விருந்திலும் கலந்து கொண்டு மணமக்கள் ஹக்கில் துஆ செய்யவும்.

இடம் :ஜெகதா பட்டினம் பெரிய பள்ளிவாசல்
மணநாள் :22/05/2011 Sunday

இவருடைய திருமண புகைபடங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் திருமணத்திற்கு பிறகு இன்ஷா அல்லாஹ் பதிவு செய்யப்படும்


Monday, May 16, 2011

தமிம் அன்சாரி அவர்களின் திருமண விழா !

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருபெயரால் ! இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய மே 19 நமது நண்பர் தமிம் அன்சாரி S/O ஹாஜி முஹமது ( ரிஸ்வான் சகோதரர் )அவர்களின் திருமணம் நடைபெற இருக்கிறது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அதை தொடர்ந்து நடைபெறும் விருந்திலும் கலந்து கொண்டு மணமக்களுக்கு துஆ செய்யவும்

இடம்: மணமகள் இல்லம், கோபால பட்டினம்

நாள் :
19/05/2011 Thursday

Wednesday, May 11, 2011

வருங்கால முதல்வர் டி.ஆர்.(காலம் 2091-2096) ஒரு மனிதருக்குள் இவ்வளோ திறமைகளா ?

சமீபத்தில் வருங்கால முதல்வர் டி.ஆர்.(காலம் 2091-2096) அவர் இசை அமைத்த ஆப்ரிக்க ஆல்பம் ஒன்று கேட்ட போது, ஒரு மனிதருக்குள் இவ்வளோ திறமைகளா என்று என்னை வியக்க வைத்தது. இந்த ஆல்பத்தில் அவர் கூற வரும் கருத்துக்குள் அனைத்தும் வியக்க வைக்கும் வகையில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த ஆப்ரிக்க ஆல்பம் இங்கே !



குறிப்பு : மொழி மாற்றம் படிக்கும் போது நிச்சயாமாக வீடியோ வை பார்த்திருக்க வேண்டும். அப்பொழுது தான் உங்களுக்கு முழுமையாக புரியும் .

தமிழாக்கம் :

1." ஊ பாப்ப ஊ ஊ ஊ பா ஊ பாப்ப ஊ ஊ ஊ பா ஊ பாப்ப ஊ ஊ ஊ பா


2.ஜொல பீலா ஜகப்பீபப் ஜிகாகு பிம்பிம்பா சிகுறு தண்டா பக்கப் ஜிகாக்கு பிம்பிம்பு


3.ஒ லம்பா லாலாம்பலம்பா பாபப்ப பலாப்பளிப்ப பாப்பப் பலாப்பளிம்ப பாபா பாபப் பாப பாபா ஓர் சிரிம்பம் ஒ கஜம்ப ஜிமாலஜஞ்ச ஜகஜகஜக்க யாபப்பையோ யாலபப்பையோ அம்பலக்கள கிழி கில்யக்கும் நாம்பளுக்கும் கிளபலயக்கும் ஆகலேக்கும் மகில்த்தியச்சாம் கி கி கி கி க் கிஜ்சக் கே அக்கா கிகிகிக்கிகி யாயா யாக் யா யோ!


4.இஜுகு ஜக்கு ஜாகாக்க ஜிப்பு இஜுகு ஜக்கு ஜாகாக்க ஜிப்பு இஜுகு ஜக்கு ஜாகாக்க ஜிப்பு கா கியூ காகக் கியூ கக்கிகா க்காக கக்கிகா ஜக்கு ஜா கா கா கா கா கா! ஒ ஆ ஒ ஆ ஒ ஆ உவா ஆ உவா ஆ ஆவா!! "


சொல்ல வரும் கருத்துக்கள் :

1." ஊ பாப்ப ஊ ஊ ஊ பா ஊ பாப்ப ஊ ஊ ஊ பா ஊ பாப்ப ஊ ஊ ஊ பா

"
தில் என்ன சொல்ல வருகிறார் என்றால், பாப்பா..... ஊ ஊ ஊ ...... அதாவது சின்னக் குழந்தையைப் பார்த்து, பாப்பா நீ சாப்பிடும் போது, ஊ ஊ ஊ என்று ஊதி சாப்பிடணும்..... சுடச்சுட சாப்பிட்டால் வாயி வெந்துடும்!


பாருங்களேன் வாழ்க்கைத் தத்துவத்தை குழந்தைகளில் இருந்து ஆரம்பிக்கிறார்! "


2.ஜொல பீலா ஜகப்பீபப் ஜிகாகு பிம்பிம்பா சிகுறு தண்டா பக்கப் ஜிகாக்கு பிம்பிம்பு


"
தில் என்ன சொல்ல வருகிறார் என்றால், இந்த பூமியில எப்பவுமே பீலா விட்டு பொழப்ப நடத்தாதே! அப்படி செய்தால் இறுதியில் ஜிகுறு தண்டா ( குளிர் பானம் ) கூட கிடைக்காமல் உன்னைய பாக் அப் ( pack up ) பண்ணி, எடுத்துண்டு விளிம்பில் போய் விட்டு விடுவார்கள்.

3.ஒ லம்பா லாலாம்பலம்பா பாபப்ப பலாப்பளிப்ப பாப்பப் பலாப்பளிம்ப பாபா பாபப் பாப பாபா ஓர் சிரிம்பம் ஒ கஜம்ப ஜிமாலஜஞ்ச ஜகஜகஜக்க யாபப்பையோ யாலபப்பையோ அம்பலக்கள கிழி கில்யக்கும் நாம்பளுக்கும் கிளபலயக்கும் ஆகலேக்கும் மகில்த்தியச்சாம்......"

ஜினி நடிச்ச பாபா படம் ஊத்திக்கிச்சு! அதுல லம்பா முதல் போட்ட தயாரிப்பாளர் கதி அம்போ னு ஆகிடுச்சு! ஆனா பாபா ஒரு பப்பாளி டப்பா கதை இல்ல! அதே நேரம் சூர்யா நடிச்ச கஜினி படம் இமாலைய சாதனை படைச்சு, வெற்றி பெற்றுச்சு!

ஆகவே நாமளும் நல்ல படமா குடுத்தா, நாமளும் பிரபலமாகலாம், நம்மளையும் நாலு பேரு மதிப்பான்!


4.இஜுகு ஜக்கு ஜாகாக்க ஜிப்பு இஜுகு ஜக்கு ஜாகாக்க ஜிப்பு இஜுகு ஜக்கு ஜாகாக்க ஜிப்பு
கா கியூ காகக் கியூ கக்கிகா க்காக கக்கிகா ஜக்கு ஜா
கா கா கா கா கா!
ஒ ஆ ஒ ஆ ஒ ஆ உவா ஆ உவா ஆ ஆவா!!........"

நாம என்னதான் ஆறாயிரம் ரூபா கொடுத்து, பான்டு வாங்கினாலும், அதுல ஜிப்பு கரெக்டா இருக்கணும்! இல்லைன்னா சிக்கலாயிடும்! அதுபோல வாழ்க்கையில சின்னச் சின்ன விஷயங்களில கூட நாம கரெக்டா இருக்கணும்!

ஏதாச்சும் வாங்கும் போது, காக்கா கூட, பொறுமையா, கியூவுல நின்னு, வாங்கிட்டுப் போவுது! மனிதா நீமட்டும் எதுக்கு, அவசரப்பட்டு ஆ...ஊ.... னு கத்துறே! இது உன்னோட வாழ்க்கைக்கு ஆவாது!


இதில் இருந்து மக்கள் பெரும் படிப்பினை :

"
வாயால் வில்லை வளைக்கலாம்" என்ற கூற்றை உண்மையாக்கி "வாயால் வயலின் வாசித்த வருங்கால முதல்வர் டி.ஆர்.(காலம் 2091-2096) அவர் கொண்ட தைரியம் மற்றும் தன்னம்பிக்கை இந்தியாவில் அவருக்கு மட்டுமே உள்ளது என்று சொன்னால் அது மிகை ஆகாது.

Monday, May 9, 2011

சாகுல் ஹமீது அவர்களின் திருமண விழா புகைப்படங்கள் !

குறிப்பு : புகைப்படங்கள் அனைத்தும் தானாக அடுத்த அடுத்த படங்களுக்கு செல்லும். ஆகையால் எதையும் கிளிக் செய்ய வேண்டாம்.

Friday, May 6, 2011

சல்மான் மற்றும் கிப்லா ஆகியோரின் திருமண விழா புகைப்படங்கள் !

குறிப்பு : புகைப்படங்கள் அனைத்தும் தானாக அடுத்த அடுத்த படங்களுக்கு செல்லும். ஆகையால் எதையும் கிளிக் செய்ய வேண்டாம்.

Thursday, April 14, 2011

சல்மான் மற்றும் கிப்லா ஆகியோரின் திருமண அழைப்பிதழ் !!!



சாகுல் ஹமீது அவர்களின் திருமண விழா !

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருபெயரால் ! இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய மே 01 நமது நண்பர் ஷாகுல் ஹமீது S/O அப்துல் ரஹ்மான் அவர்களின் திருமணம் நடைபெற இருக்கிறது. ( இவருடைய வீடு ஹாபிஸ், சல்மான் வீட்டுக்கு அருகில் உள்ளது ) ஆதலால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அதை தொடர்ந்து நடைபெறும் விருந்திலும் கலந்து கொண்டு மணமக்களுக்கு துஆ செய்யவும்

இடம்: MKA நிஷா திருமண மண்டபம் கோட்டைபட்டினம்

நாள் :
01/05/2011 Sunday

இவருடைய திருமண புகைபடங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் திருமணத்திற்கு பிறகு இன்ஷா அல்லாஹ் பதிவு செய்யப்படும்

Friday, April 1, 2011

சல்மான் மற்றும் கிப்லா ஆகியோரின் திருமண விழா !

அல்லாஹ்வின் திருபெயரால் ! இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய April 24th நமது நண்பர் சல்மான் பாரிஸ் மற்றும் அவருடைய சகோதரர் கிப்லா கான் ஆகியோரின் திருமணங்கள் நடைபெற இருக்கிறது. ஆதலால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அதை தொடர்ந்து நடைபெறும் விருந்திலும் கலந்து கொண்டு மணமக்களுக்கு துஆ செய்யவும்

இடம்: MKA நிஷா திருமண மண்டபம் கோட்டைபட்டினம்
நாள் : 24/4/2011 Sunday

இவர்களுடைய திருமண புகைபடங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் திருமணத்திற்கு பிறகு இன்ஷா அல்லாஹ் பதிவு செய்யப்படும்

Tuesday, March 29, 2011

வருங்கால முதல்வர் டி.ஆர்.(காலம் 2091-2096)

நான் படித்ததில் பிடித்த நகைசுவையான அடுக்கு மொழி வசனங்கள்

லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை.....



தற்போது வரும் அறிக்கைகளில் சிலர் தங்கள் கோணத்தில் சொல்வதைப் போல நாங்களும் விரட்டப்பட்டவர்களும் அல்ல. விடு பட்டவர்களும் அல்ல. துரத்தப்பட்டவர்களும் அல்ல.


தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்துப் பார்த்து தூரம் தள்ளி நின்றவர்கள். கடந்த காலத்து கசந்த அனுபவங்கள் மறக்க வில்லை. அதனால் இந்த தேர்தல் குறித்து இடைப்பட்ட காலத்தில் நான் வாய் திறக்கவில்லை.

இந்த காலத்தில் அரசியலில் முன்னேறுவதற்கு தேவைப்படுகின்றன சில அடிப்படைத் தகுதிகள். அப்படிப்பட்ட தகுதிகள் இருந்தால்தான் தேர்தலில் கூட கிடைக்கும்போல இருக்கிறது கணிசமான தொகுதிகள். இன்றைய சூழலில் அரசியலில் முன்னேறுவதற்கு தேவை யோகம். மாறாக தேவை இல்லவே இல்லையோ தியாகம்.

ஆம் நாட்டு நடப்பைப்பார்த்தால் அரசியல் ஆகி விட்டது கேலிக்கூத்து. அதிக பட்சத்தினர் பேசுகின்றனர். வரும் இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிக்கும் நாள் ஏப்ரல்-13 வாக்குகளை எண்ணும் நாள் மே-13. இடையில் இருப்பது ஒரு மாசம். எதற்கு இந்த அவகாசம்? எனப் பலர் மனதில் எழுந்தது இந்தக் கேள்வி. எந்த கண்கட்டு வித்தை காரணமாகவும் கண்டு விடக்கூடாதல்லவா தோல்வி.

என இந்த தேர்தலில் இறைவனை நோக்கி நடத்த விரும்புகிறோம் ஒரு வேள்வி. மின்னணு வாக்கு பதிவில் குளறுபடி நடப்பதற்கு இருக்கிறதாம் பல வழிமுறை... ஆகையால் மீண்டும் வர வேண்டும் வாக்குச் சீட்டு முறை... அப்படி ஒரு மாற்றம் வராத வரை இந்திய ஜனநாயகத்துக்கே அதுபெரும் குறை. அமாவாசையன்று மாதத்தில் வான் நிலவுக்கு ஒரு நாள் விடுமுறை. சில நாள் வளர்பிறை.

சில நாள் தேய்பிறை. இந்த சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரையில் எங்களுக்கு இருக்கலாம் தேய்பிறை.

இறைவன் அருளால் வரும் காலத்தில் காண்போம் வளர்பிறை. இந்த தேர்தல் காலம் எங்களுக்கான கோடை விடு முறை. கொள்கையைக் காக்க இதுதான் எனக்கு தெரிந்த நடைமுறை.


தனித்து நின்று தனி ஆவர்த்தனம் வாசிப்போம் என்று சொல்லவும் கூடாது. தண்டவாளம் இல்லாத ஊருக்கு புறப்பட்டு போகவும் முடியாது என்ற சமயோசித முடிவின்படி இந்த சட்ட மன்ற தேர்தலெனும் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆட்டக் காரர்களாக களமிறங்காமல் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க விரும்புகிறோம்’’தெரிவித்துள்ளார்.

ஏய் தண்டகக்கா ! ! ! ஏய் நனக்குனக்கா

Wednesday, March 23, 2011

நடைபெற இருக்கும் திருமணங்கள் !

இன்ஷா அல்லாஹ் வரவிருக்கும் ஏப்ரல் இறுதியில் இருந்து மே மாதம் இறுதிவரை தொடர்ச்சியாக நண்பர்களின் திருமணங்கள் நடைபெற இருபதாக நமது திருச்சி நிருபர் யூசுப் தெரிவித்து உள்ளார்.

ஏப்ரல் இறுதியில் சல்மான் மற்றும் அவருடைய சகோதரர் கிப்லா கான் ஆகியோருக்கும், மே முதல் வாரத்தில் ஷாகுல் ஹமீது S/O அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும் மே இரண்டு அல்லது மூன்றாம் வாரதில் அப்துல்லா
அவர்களுக்கும் மே இறுதியில் தமிம் அன்சாரிகும் திருமணம் நடக்க இருபதாக தெரிகிறது .

இவர்களுடைய திருமண புகைபடங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் திருமணத்திற்கு பிறகு இன்ஷா அல்லாஹ் பதிவு செய்யப்படும்

Monday, March 21, 2011

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 1)சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, 2)ஆம்பூர் 3) இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இராமநாதபுரத்தில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் எம். தமிமுன் அன்சாரி, ஆம்பூரில் அஸ்லம் பாட்ஷா ஆகியோர் போட்டியிடுவார்கள்.

Thursday, January 13, 2011

சல்மான் அவர்களின் திருமண விழா !

அளவிலா கருணையும் நிகரில்லா கிருபையும் கொண்ட அல்லாஹ்வின் திருபெயரால் ! இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய February 13 நமது ஊர் ராசிக் அவர்களின் சகோதரர் சல்மான் பாரிஸ் அவர்களின் திருமணம் நடைபெற இருக்கிறது. ஆதலால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அதை தொடர்ந்து நடைபெறும் விருந்திலும் கலந்து கொண்டு மணமக்களுக்கு துஆ செய்யவும்

இடம்: MKR நிஷா திருமண மண்டபம் கோட்டைபட்டினம்
நாள் : 13/2/2011 Sunday

இவருடைய திருமண புகைபடங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் திருமணத்திற்கு பிறகு இன்ஷா அல்லாஹ் பதிவு செய்யப்படும்

بِسْــــــــــــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيم

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
This is Hussain Ali.Msc From Jegatha Pattinam. I studied school education in GHSS school, and I completed Bsc in Jamal Mohamed College-Trichy & completed Msc in Annamalai University-Chidambaram. Now I am working in chennai. ஒரே வரியில் சொல்லுவது என்றால்..... இலக்கின்றி பயணம்....... எதையும் பற்றியும் பற்றாமலும்....

Saddam Hussein صدام حسين

Saddam Hussein صدام حسين