Friday, November 30, 2012

கல்வி வழிகாட்டி முகாம்


இன்ஷா அல்லாஹ் வருகின்ற 2.12.2012 ஞாயிற்று கிழமை மாலை 4 மணிக்கு "மாணவர் இந்தியா மற்றும் STAR FOUNDATION " இனைந்து நடத்தும் 
* கல்வி வழிகாட்டி முகாம் * 

சிறப்புரை:

ஜனாப்: முஸ்தபா கமாலுதீன் B.sc.,B.Ed.,PGDSC.,
(கல்வியின் முக்கியதுவம்)

ஜனாப்: மெளலவி ஹாபிஸ் A.ஜாபா் அலி உலவியு B.A.,DCA.,
( மார்க்கம் கூறும் மாணவப்பருவ நல்லொழுக்கங்கள்)

இது நமது ஊர் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நடத்தபடும் நிகழ்ச்சி. இது போன்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தபடும். விருப்பம் உள்ளவர்கள் இனைந்து கொள்ளலாம்.

ஆலோசனைகள் வரவோர்கபடுகிறது தொடர்புக்கு: 9787041010


Monday, October 15, 2012

இந்திய அடையாள அட்டை (AATHER) புகைப்படம் எடுக்கும் பனி

நமது ஊரில் கடந்த நான்கு, ஐந்து நாட்களாக (AATHER) இந்திய அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் பனி நடைபெற்றது. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இதை போல் ஒரு முறை போட்டோ எடுக்க்கபட்டது. அச்சமயம் எடுக்கப்பட்ட புகைப்படம் அனைத்தும் காணாமல் போய் விட்டதால் இப்பொழுது மீண்டும் எடுக்கபடுகிறது. ஆகவே இந்த முறை எடுகாதவறாக்கள் கவலை பட தேவை இல்லை. கண்டிப்பாக இந்த முறை எடுக்கப்படும் புகைப்படமும் காணாமல் போக வாய்ப்பு மிக மிக பிரகாசமாக உள்ளது. மீண்டும் ஒரு 5 அல்லது 10 தடவை எடுக்க படும்  என தெரிகிறது. அப்பொழுது புகைப்படம் எடுக்க தவறியவர்கள் எடுத்து கொள்ளலாம்.

Tuesday, October 2, 2012

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ

நமது ஊரில் இருந்து இந்த வருடம் ஹஜ்க்கு சகோதரர் ஹாரிஸ் (பெங்களூர்), இப்ராகிம் அவர்களுடைய வாப்பா அவர்களும் மற்றும் சகோதரர் முஹமது கான் அவர்களுடைய தாயாரும் இன்ஷா அல்லாஹ் வரும் 5th ஊரில் இருந்து கிளம்பி சென்னை வருகிறார்கள். 8th அன்று சென்னை இல் இருந்து பயணம் செல்ல இருக்கிறார்கள்.

அவர்களுடைய பயணம் இலேசானதாகவும், நமது வாழ்க்கையிலும் ஹஜ்ஜ் கு செல்ல கூடிய பாக்கியத்தை அல்லாஹு நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக ஆமின்  


Thursday, September 27, 2012

கூட்டு குர்பானி தொடர்பாக

இப்ராஹீம் (அலை) நபியவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காகவும், அவர்களைப் போல் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என்று உறுதி எடுப்பதற்காகவும் வசதி வாய்ப்புள்ளவர்கள் மீது குர்பானி கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

அதன் அடிபடையில், நமது ஊரில் எல்லா வருடம் போல் இந்த வருடமும் கூட்டு குர்பானி க்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சகோதரர்கள் தங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்ளும் படி கேட்டு கொள்ளபடுகிறது.

ஒரு பங்கின் விலை RS 1000/

மேலும் தொடர்ப்புக்கு 

செய்யது 99424 49265 


Monday, September 24, 2012

இம்தியாஸ் திருமண விழா ! ! !

நமது நண்பர் இம்தியாஸ் அஹ்மத் (S/O நிஜாம் ) திருமண விழா வரும் அக்டோபர் 21 ஞாயற்று கிழமை நமது ஊரில் நடக்க இருக்கிறது. நண்பர்கள,  உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்கள் ஹக்கில் துஆ செய்யவும்.

இடம் :  ஜும்மா பள்ளிவாசல், ஜெகதாபட்டினம்

மணநாள் : அக்டோபர் 21  2012

இவருடைய திருமண புகைபடங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் திருமணத்திற்கு பிறகு இன்ஷா அல்லாஹ் பதிவு செய்யப்படும்.

Tuesday, September 18, 2012

வரதட்சனை புதைப்பு மாநாடு

நமது பக்கத்துக்கு ஊர் அம்மா பட்டினத்தில் கடந்த ஞாயிட்ரு கிழமை ( 16 September 2012 ) கடற்கரை பகுதி உலமாக்கள் சார்பாக காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 'வரதட்சனை புதைப்பு மாநாடு' நடைபெற்றது. இதில் கடற்கரை பகுதி ஜமாஅத் கட்டுமாவடி முதல்  S P பட்டினம் வரை உள்ள அணைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு செய்யப்பட்டு, அணைத்து ஊர் களிலும் இருந்து மக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில்,  வரதட்சனை முற்றிலுமாக ஒழிக்க படவேண்டும் என்று உலமாக்கள் சிறப்பாக உரையாற்றினார்கள். 

Monday, August 27, 2012

அசிம் ஹாபிஸ் திருமண விழா !!!!

நமது ஊர் அசிம் ஹாபிஸ் (S/O பந்தே நவாஸ் ) அவருக்கு வரும் செப்டம்பர் 02 2012 திருமணம் நடக்க இருக்கிறது. நண்பர்கள,  உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்கள் ஹக்கில் துஆ செய்யவும். 

இடம் :நிஷா திருமண மண்டபம். கோட்டைபட்டினம்  

மணநாள் :September 02 2012

இவருடைய திருமண புகைபடங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் திருமணத்திற்கு பிறகு இன்ஷா அல்லாஹ் பதிவு செய்யப்படும் 

Thursday, August 23, 2012

நோன்பு பெருநாள் தொழுகை

நமது ஊரில் நோன்பு பெருநாள் மிகவும் சந்தோசமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்பட்டது. சகோதரர்கள் அனைவரும் தங்களுக்குள் அன்பையும், பாசத்தையும் ஒருவருக்கொருவர் பரிமாரிகொண்டனர்.

மிகுந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.




Wednesday, August 15, 2012

நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்! ! ! !

அஸ்ஸலாமு அழைக்கும்

உலகில் வாழும் அனைத்து  முஸ்லிம் சகோதரர்கள், குறிப்பாக நமது ஊர் சகோதரர்கள் அனைவருக்கும் புனிதமிகு நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்




அல்லாஹ் நாம் நோற்ற நோன்பின் நன்மைகள் அனைத்தும் தந்து, பகைமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமை என்னும் கயரை பற்றி பிடித்து, சகோதரத்துடன் சேர்ந்து வாழ கிருபை செய்வானாக ஆமின் ஆமின் !!!!

Wednesday, August 8, 2012

பித்ரா விநியோகம்


சகோதர்கள் கவனதிக்கு 

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது.

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817

நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.

அதன் அடிப்படையில் நமது ஊரில், சென்ற வருடம் போன்று இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும் பித்ரா விநியோகம் செய்யபட உள்ளது. நபர் ஒன்றுக்கு ரூபாய் 85 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள.
செய்யது 
9942114512

Sunday, July 22, 2012

பெண்கள் மதரசா

நமது ஊரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பெண்கள் மதரஸா நல்ல முறைகள் கட்டப்பட்டு, இந்த வருட தராவிஹு தொழுகை நடைபெற்று வருகிறது. கடந்த  வெள்ளிகிழமை 22 (July 2012) அசர் தொழுகைக்கு பிறகு புதிய மதரசாவில் சூரா யாசின் ஓதப்பட்டு, துஆ செய்யப்பட்டது.


Wednesday, July 11, 2012

ரமலானை வரவேற்போம் ! ! ! !

“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” ( அல்குர்ஆன் 2:183)
நபி (ஸல்) கூறினார்கள்:
இதோ! ரமழான் மாதம் உங்களிடம் வந்துவிட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட மேலானது. அந்த இரவில் பாக்கியம் பெறாதவர் ஒட்டு மொத்த பாக்கியத்தையும் இழந்தவராவார். (நஸயீ)
ரமழானின் சிறப்பு
இறைவன் ரமழானுக்கென்று சில சிறப்புகளை வழங்கியுள்ளான் அவற்றுள் சில:
- இம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது,
- ஷைத்தான்களின் சூழ்ச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நன்மைகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.
- ஆயிரம் மாதங்களைவிட மேலான இரவு இம்மாதத்தில்தான் உள்ளது. எனவே
குறைந்த வழிபாடுகளை செய்து நிறைந்த நன்மைகளை அடைய முடிகிறது,
- நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை இறைவனிடம் கஸ்தூரியை விட அதிக
மணமுடையது,
- இம்மாதத்தில் நோற்கும் நோன்பு 700 மடங்குக்கும் அதிகமாக கணக்கிலடங்காத நன்மைகளை வாரித்தருகிறது.
மேற்கண்ட அனைத்தும் குர்ஆன், சுன்னா ஆதாரங்களிலிருந்து தெரியவரும் உண்மைகளாகும்
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமலானில் நன்மைகள் செய்யக்கூடிய மக்களாக நம்மை அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக ! ! !

Tuesday, June 19, 2012

புனித மிகு மெஹ்ராஜ் ! ! ! !

நமது ஊரில் புனித மிகு மெஹ்ராஜ் முன்னிட்டு, ஞாயிரு இரவு சிறப்பு பயானும் அதை தொடருந்து திக்கு மஜிலிசும் நடந்தது. திங்கள் காலை தேங்காய் சோறு வழங்க பட்டு, எப்போதும் போல் சந்தோசமான மெஹ்ராஜ் கொண்டாடப்பட்டது.  

Monday, May 28, 2012

மௌலானா அபூபக்கர் சாகிப் அவர்களின் கொடி ஏற்றம்

 நமது ஊரில் மௌலானா அபூபக்கர் சாகிப் அவர்களின் கொடி ஏற்றம் கடந்த சனி கிழமை (26-05-2012) நடைபெற்றது. அதை தொடர்ந்து மௌளது ஓத பட்டு, கற்றம் இரவு மற்றும் கந்தூரி நடைபெறும்.

Tuesday, April 17, 2012

ஹுசைன், சுக்கூர் ஆகியோரின் திருமண விழா அழைப்பிதழ் ! ! ! !





( Image ஐ கிளிக் செய்து பார்க்கவும் )

நண்பர்களின் திருமண விழா ! ! ! ! மே 06 2012

இன்ஷா அல்லாஹ் வரும் மே ௦6 2012 ஞாயிற்று கிழமை நமது ஊரில் 3 திருமணங்கள் நடைபெற இருக்கிறது. 

நண்பர்கள் ரஹ்மத்துல்லாஹ், பாதுஷா மற்றும் கலந்தர் ஆகியோரின் திருமண விழா நடைபெற இருக்கிறது. 

இன்ஷா அல்லாஹ் இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு, மணமக்கள் ஹக்கில் துஆ செய்யவும். இவர்களுடைய திருமண விழா புகைப்படம் மற்றும் வீடியோ காட்சி திருமணதிற்கு பிறகு பதிவு செய்ய படும்.



Monday, April 16, 2012

யூசுப் அவர்களின் திருமண விழா அழைப்பிதழ் ! ! ! !


( Image ஐ கிளிக் செய்து பார்க்கவும் )

Tuesday, April 10, 2012

முஸ்லிம் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு இலவசம் ! ! ! !


பெரும்பாலான மாணவ, மாணவியர் +2 முடித்தவுடன் பி.இ. எனப்படும் என்ஜினியரிங் படிப்பு படிக்கவே விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும்.
ஆனால் சென்ற ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர். மீதமுள்ள 30 ஆயிரம் சீட்டுகள் கடைசி வரை காலியாகவே கிடந்தன.
இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 94 பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவங்கப் பட உள்ளன. இதற்கு அனுமதி கோரி அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன, இவற்றில் பெரும்பாலான கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்து விடும் என்று தெரிகிறது.
 இதன் மூலம் கூடுதலாக 12 ஆயிரம் மாணவ, மாணவியர் பொறியியல் படிப்பு படிக்கலாம். சுருங்கச் சொல்வதெனில் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சீட் ரெடி. இது தெரியாமல் நிறைய முஸ்லிம் மாணவ, மாணவியர் நிர்வாகக் கோட்டவுக்கு பல லட்ச ரூபாய் கொடுத்து விட்டு கை பிசைந்து நிற்பதை பார்க்க முடிகிறது.
பொறியியல் படிப்புக்கு மூன்று விதத்தில் சீட்கள் ஒதுக்கப்படுகின்றன. +2வில் மிக அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் சீட்கள் ஒதுக்கப்படும். இந்த சீட்களை பெற்றவர்களுக்கு வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வராது.
அதோடு நன்கொடையும் பெறப்படாது. அதற்கு அடுத்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் சீட்கள் ஒதுக்கப்படும்.
ஒரு தனியார் கல்லூரிகளில் 100 சீடகள் இருந்தால் அதில் 60 சீட்கள் அரசு வசம் ஒப்படைக்கப்படும். அதே தனியார் கல்லூரி சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரியாக இருந்தால் 40 சீட்கள் அரசு வசம் ஒப்படைத்து விடுவார்கள்.
இப்படி அரசு வசம் ஒப்படைக்கப்பட்ட கல்லூரி சீட்களுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த சீட்களுக்கு கட்டணமாக ரூ. 32 ஆயிரம் வரை (வருடத்திற்கு) செலுத்த வேண்டியிருக்கும். இந்த சீட்களும் கிடைக்காமல் போகும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாக கோட்டா சீட் தான் கதி.
ஒரு தனியார் கல்லூரி 100 சீட்களில் 60 சீட்களை அரசு வசம் ஒப்படைத்து விட்டால் மீதம் 40 சீட்கள் இருக்குமல்லவா? இந்த 40 சீட்கள் தான் நிர்வாக கோட்டா சீட்கள் என அழைக்கப்படுகின்றன. தரமான கல்லூரிகளில் இந்த சீட் 3 லட்ச ரூபாய் வரை விலை போகிறது.
பிரபலமல்லாத கல்லூரிகளில் வெறும் 32 ஆயிரம் ரூபாய்க்கும் தரப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இந்த இட ஒதுக்கீடு கிடைத்த பிறகு எப்போதும் இல்லாத வகையில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் அதிக முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு இடம் கிடைத்துள்ளது.
இதில் இடம் கிடைக்காத முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு தனியார் கல்லூரிகள் அரசு வசம் ஒப்படைத்த சீட்களில் படிக்க இடம் கிடைக்கும். இதிலும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு உண்டு. அதனால் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் முஸ்லிம் மாணவ, மாணவியர் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இந்த மாதம் 31ம் தேதிக்குள் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி விட வேண்டும்.
அடுத்த ஜீன் மாதம் 18ம் தேதியன்று ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு 28ஆம் தேதியன்று கவுன்சிலிங் தொடங்கும். அந்தக் கவுன்சிலிங் ஜூலை 25ம் தேதி முடிவடையும்.
இந்த ஆண்டு மருத்தவம், பல் மருத்துவம், பொறியியக்ம் வேளாண்மை, கால்நடை மற்றும் சட்டக் கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவியர் அவரது குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருந்தால் படிப்பு கட்டணச் செலவை அரசே ஏற்கும். விண்ணப்பதாரரின் தாய், தந்தை, பெற்றோரின் பெற்றோர், உடன் பிறந்தோர் பட்டதாரியாக இல்லாமல் இருந்தால் இந்தச் சலுகை கிடைக்கும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக் கழக பாடப் பிரிவுகளுக்கு பலகலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் அரசு செலுத்தி விடும்.
இந்த சலுகையை பெற வேண்டுமெனில் தங்கள் குடும்பத்தில் வேறு பட்டதாரி எவரும் இல்லை என்ற சான்றிதழை தங்களது பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் மூலம் விண்ணப்பித்து துணை வட்டாட்சியர் பதவிக்கு குறையாத அலுவலரிடம் இருந்து சான்றிதழ் பெற்று இணைக்க வேண்டும்.
பெரும்பாலான முஸ்லிம் குடும்பங்களில் பட்டதாரிகள் இருக்க மாட்டார்கள். அதனால் இந்த கட்டணச் சலுகை முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு பலன் தரும் என்பதே உண்மை. இந்தச் சலுகையை முஸ்லிம் மாணவ, மாணவியர் ஒழுங்கான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Tuesday, March 27, 2012

ஜெகத பட்டினம் மின் வெட்டு நேரம் ! ! !

நமது ஊரில் மின் வெட்டு நேரம் மிகவும் மோசமான நிலைமை நீடிக்கிறது.
காலை - 9am to 12pm
மத்தியானம் - 2pm to 5pm
சாயுங்காலம் - 6pm to 8pm
இரவு - 8.30pm to 10.30pm
Special Cut - 11.00pm to 3.00am ( வாரத்தில் 7 நாட்கள் மட்டும் )

ஆகவே மொத்தத்தில், கூட்டி, கழித்து, வகுத்து, பெருக்கி மற்றும் கடன் வாங்கி களிததில், மின்சாரம் உள்ள உள்ள நேரம் 7.30 House Only


ஆகவே இனி வரும் காலங்களில், நாட்குறிப்பு (calender) இல் நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு, கேது உள்ளது போல், மின் வெட்டு நேரம், மின்சாரம் வரும் நேரம் என்ற தகவலும் இருந்தால், ஜெதபட்டினம் மக்களுக்கு நல்ல பயன் உள்ள Calender ஆக இருக்கும்.

மாதந்திர மசூரா கூட்டம்

நமது ஊரில் கடந்த சனி கிழமை 24/3/2012 நமது ஹல்கா மாதந்திர மசூரா கூட்டம் நமது ஊரில் நடைபெற்றது. இதில் நமது ஊர் மற்றும் பக்கத்துக்கு ஊரை சார்ந்த அனைத்து சகோதர்கள அனைவரும் கலந்து கொண்டனர். அல்லாஹ்வின் வல்லமை மற்றும் அவனுடைய அருட்கொடை ஆகியவை பற்றி விரிவாக உலமாக்கள் பயான் நடந்தது. 







இறுதியில் மதியம் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டு, நல்ல முறையில் நடந்து முடிந்தது.

Thursday, March 22, 2012

புதிய பாஸ்போர்ட் - தொடர்பானது

புதிய பாஸ்போர்ட் சட்டம் வந்துள்ளது சம்பந்தமாக நமது இந்தியத்தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்ததில்...

வளந்த புதிய தொழில்நுட்பமுறைகளில் ஒன்றான பார் கோட் ரீடிங் முறையில் புதிய தொழில் நுட்பத்துடன் உலகளவில் பாஸ்போர்ட்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் பார்கோட் இல்லாத பாஸ்போர்ட்டுகளில் அய்ரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள் செல்பவர்களுக்கு சிரமங்கள் இருப்பதாகவும் அந்நாடுகளில் பார்கோட் இல்லாத பாஸ்போர்ட்களை அனுமதிப்பதில்லை என்றும் சொன்னார்கள் அதிகமான நாடுகளில் பார்கோட் நடைமுறைக்கு வந்து விட்டதால் சவூதியில் வசிக்கும் இந்தியர்களும் தனது பாஸ்போர்ட்களை புதிய முறைக்கு மாற்றிக் கொள்ளும்படி இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆகவே சவூதி வாழ் இந்தியர்கள், புதிய முறைகளில் வழக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் இல்லாதவர்கள் பிறநாடுகள் பயணிப்பதற்கு முன் தூதரகத்தை தொடர்புகொண்டு புதிய சட்டதிட்டங்களின் படி தங்களது பாஸ்போர்ட்களை மற்றிக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மத்திய மண்டலம்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ரியாத்.



Friday, March 16, 2012

யூசுப், ஹுசைன், சுக்கூர் ஆகியோரின் திருமண விழா!!!

இன்ஷா அல்லாஹ் வரும் ஏப்ரல் 29 2012 ஞாயிற்று கிழமை நமது நண்பர் Y.யூசுப் (சகோதரர்கள்: பாரூக், இத்ரிஸ், முஜீப்) அவர்களின் திருமண விழா நடைபெற இருக்கிறது. அதை தொடர்ந்து, ஹுசைன் மற்றும் சுக்கூர் அவர்களின் திருமண விழா மே ௦05 2012 சனி கிழமை நடைபெற இருக்கிறது.

இன்ஷா அல்லாஹ் இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு, மணமக்கள் ஹக்கில் துஆ செய்யவும்.

Wednesday, February 29, 2012

பெண்கள் மதரசா கட்டும் பணி தொடங்கியது ! ! ! !

நமது ஊரில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற பெண்கள் மதரசா கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய மதரசா மற்றும் கல்யாண மண்டபம் கட்டும் பணி தொடங்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக முன் பகுதியில் இருக்கும் கட்டிடத்தை இடித்து விட்டு, அப்புறபடுத்தும் பணி நடைபெறுகிறது.

Friday, January 20, 2012

"மேதை" படத்தால் அடிவாங்கிய நண்பன் & வேட்டை

போட்டோ கமெண்ட்ஸ் அனைத்தும் கற்பனையே.. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல..


( படிததில் இருந்து சுட்டது ! ! ! ! )















بِسْــــــــــــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيم

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
This is Hussain Ali.Msc From Jegatha Pattinam. I studied school education in GHSS school, and I completed Bsc in Jamal Mohamed College-Trichy & completed Msc in Annamalai University-Chidambaram. Now I am working in chennai. ஒரே வரியில் சொல்லுவது என்றால்..... இலக்கின்றி பயணம்....... எதையும் பற்றியும் பற்றாமலும்....

Saddam Hussein صدام حسين

Saddam Hussein صدام حسين