Monday, December 27, 2010

அந்த நாள்! ! ஞாபகம்! ! நெஞ்சிலே வந்ததே ! !

அந்த காலத்து தூர்தர்ஷன் நிகழ்சிகள் சிலவற்றை நம்மால் மறக்க முடியாது. அவற்றில் என் நினைவில் உள்ள சில! இதில் விடுபட்ட ஏதேனும் இருந்தால் பதிவு செய்யவும் :

1. தூர்தர்ஷன் Logo:
2. தடங்களுக்கு வருந்துகிறோம்: திரைப்படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை குறைந்த பட்சம் 50 தடவை வரும் :
3.திரைபடம் தொடர்கிறது! ! !
4.எதிரொலி (weekly once) : அந்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சி பற்றிய தொகுப்பு:
5.வயலும் வாழ்வும் (weekly once) : விவசாயகளுகான நிகழ்ச்சி
6. காது கேட்காதவர்களுக்கான சிறப்பு செய்திகள் ( daily):

7.Maalkudi Days - serial (weekly once):
8.சாந்தி- serial (Mon to Fri - 2.00pm to 3.00pm) :
9.Alif Laila-Magic serial (weekly once) :
10.திப்பு சுல்தான் (serial) :

11.சக்திமான் (Every Sunday 11am to 12pm):
12.குடியரசு மற்றும் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி : சிறப்பு நடனம் மற்றும் பாட்டு (From 6.00am to 4.00pm)


13.குடியரசு மற்றும் சுதந்திர தின சிறப்பு திரைப்படம் (From 4.00pm onwards: ரோஜா
14.ஒளியும் ஒளியும் : புது பாடல்கள் என்று பழைய பாடல்கள் திட்டமிட்டு ஒளிபரப்பபடும்
15.திரைமலர்: மொத்தம் அரை மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி 20 நிமிடங்கள் விளம்பரம் 5 நிமிடம் "தடங்கலுக்கு வருந்துகிறோம்" மீதி 5 நிமிடம் படம் ஒளிபரப்பாகும்.
16.Friday Movie: Starting from 9.30pm and ending time 5.00 am

16. இறுதியாக இந்த நிகழ்ச்சி அனைத்தையும் வழங்குபவர்கள் : விக்கோ, நிர்மா மற்றும் காம்ப்ளான்
























இறுதியாக முக்கிய நிகழ்ச்சியான "காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு" நிகழ்ச்சின் சரியான Images கிடைக்கவில்லை. காணாமல் போனவர்களை தேடுவது போல் நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன். உங்களிடம் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும்.

சாவனா (எ) ஷாகுல் ஹமீது

நமது ஊரின் செல்ல பிள்ளை சாவனா சாவனா () H.ஷாகுல் ஹமீது Bsc, DCA, HDFC camp:Brunei (எனக்கு HDFC என்ற படிப்பின் விரிவாக்கம் தெரியாது. ஒரு வேலை HDFC Bank தேர்வு தேர்ச்சி பெற்று இருப்பார் போல ?!!! ) இவர் புதிதாக Gmail மற்றும் FaceBook போன்றவற்றில் இணைத்துள்ளார். ஆகையால் ஆங்காங்கே இருக்கும் இவரை தெரிந்த நண்பர்கள் மற்றும் தெரியாத நண்பர்கள் அனைவரும் இவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளுகிறார்.

இவருடைய Gmail முகவரி : shahuljpm@gmail.com
FaceBook ID : http://www.facebook.com/home.php#!/profile.php?id=100001874518423

பின் குறிப்பு : இவர் அம்மாபட்டினத்தின் மருமகன். இவருடைய திருமணத்தின் போது வாழ்த்து அட்டையில் H.ஷாகுல் ஹமீது Bsc, DCA, HDFC என்று இருந்தது குறுபிடதக்கது!

Monday, November 15, 2010

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

எனது நண்பர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் அனைவர்க்கும் மற்றும் ஊரில் இருக்கும் நண்பர்கள் அனைவர்க்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்


பகைமைகளை மறந்து அனைவரும் சகோதர பாசத்துடன் ஹஜ் பெருநாளை இன்ஷா அல்லாஹ் கொண்டாடுவோம்

Thursday, September 9, 2010

இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்

அன்பிற்கு இனிய சகோதர்கள் அனைவர்க்கும் என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்... அல்லா நாம் நோற்ற நோன்பின் முழு நன்மைகளை கொடுத்து, இரு உலகிலும் வெற்றி பெற்ற மக்களாக நாம் அனைவரையும் ஆக்குவானாக ! ஆமீன்



குறிப்பாக நாம் அனைவரும் நம் சமுதாய மக்கள் அனைவரையும் சகோதர சகோதரனாக பார்போம் இன்ஷா அல்லா. கட்சி, பிரிவினை மற்றும் அமைப்பு சார்ந்த கொள்கைகளை மறந்து, முஸ்லிம் சகோதரனாக அனைவரையும் பார்ப்போமாக!

Wednesday, August 11, 2010

புனிதமிகு ரமலானே வருக !

நமது ஊரில் வசிக்கும் சகோதர்கள் மற்றும் குறிப்பாக வெளிநாட்டில் வசிக்கும் சகோதர்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த புனிதமிகு ரமலான் நல்வாழ்த்துக்கள்.

அல்ல்லாஹ் நாம் அனைவருக்கும் ரம்ஜான் மாதத்தின் முழு நன்மையையும் தருவானாக !





ஆமின்

Tuesday, July 6, 2010

மாநாடு ஒரு பார்வை !

இந்த மாநாடு க்கு நானும் சென்று இருந்தேன்...

ஜூலை 2010ம் ஆண்டு 4ம் தேதி சென்னை தீவுத்திடல் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் எழுச்சியுடன் பங்கேற்ற, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி & மாநாட்டில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :


நீதிபதி மிஸ்ரா, சச்சார் ஆகியோருக்கு நன்றி

1. இந்திய நாட்டை உருவாக்குவதிலும், இந்தியாவின் அடிமைத் தளையை உடைத்தெறிவதிலும் பெரும் பங்கு ஆற்றிய முஸ்லிம்கள் நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகள் கடந்த பின்பும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு அமைத்த நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிஷனும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் இதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளன. முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மிஸ்ரா கமிஷன் தெளிவான பரிந்துரை யையும் வழங்கியுள்ளது. முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் இதற்காக இம்மாநாடு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

கல்வியில் இட ஒதுக்கீடு

2. முஸ்லிம்களின் இந்த அவல நிலை மாறிட ..டி, ..எம், ..எஸ்.சி. உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அனைத்து மாநிலங்களில் உள்ள கல்லூரிகளிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க வேண்டும் என்று முஸ்ம் சமுதாயம் சார்பில் இம்மாநாடு மத்திய அரசை வயுறுத்துகிறது.

வேலை வய்ப்பில் இட ஒதுக்கீடு

3. அனைத்து மாநிலங்களிலும், அனைத்து மத்திய அரசுப் பணிகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், தனியார்கள் நடத்தும் பெரிய நிறுவனங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க இம்மாநாடு மத்திய அரசை வயுறுத்துகிறது.


பாதுகாப்புத்துறையில் இட ஒதுக்கீடு

4. நாட்டில் நடக்கும் வகுப்புக் கலவரங்களின்போது, காவல்துறை, உளவுத்துறை, மத்தியக் காவல் படை, துணை இராணுவம் மற்றும் இராணுவம் ஆகிய அனைத்து துறைகளும் பாரபட்சமாகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் நடந்துள்ளனர். இதை மத்திய அரசு அமைத்த பல்வேறு கமிஷன்கள் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியுள்ளன. எனவே மத்திய அரசின் இராணுவம், உளவு உள்ளிட்ட பாதுகாப்புத் துறைகளிலும் மாநில அரசுகளின் காவல் மற்றும் உளவுத்துறையிலும் 20 சதவிகிதம் முஸ்லிம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.

அரசியல் அதிகாரத்தில் தனி இட ஒதுக்கீடு

5. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மாநில சட்டமன்றங்களிலும் முஸ்ம்களின் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. அனைத்துக் கட்சிகளும், பெரும்பான்மை சமுதாய வேட்பாளரையே நிறுத்துவதால் முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தில் பங்கு பெற இயலவில்லை. இந்த நிலை மாறிட தத் சமுதாய மக்களுக்கு ரிசர்வ் தொகுதிகள் இருப்பதுபோல் உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளு மன்றம், மாநிலங்களவை, மாநில மேலவைகள் அனைத்திலும் பத்து விழுக்காடு தொகுதிகளை முஸ்லிம் ரிசர்வ் தொகுதிகளாக அறிவித்து சட்டமியற்ற மத்திய அரசை முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் இம்மாநாடு வயுறுத்துகிறது.

நலத்திட்டங்களிலும் இட ஒதுக்கீடு

6. மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்டங்களிலும், இலவசத் திட்டங்களிலும் அதிகாரிகள் முஸ்லிம்களைப் புறக்கணித்து துரோகம் செய்து வருகின்றனர். எனவே நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரைக்கு ஏற்ப அனைத்து நலத்திட்டங்களிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

முஸ்ம் பல்கலைக் கழகம்

7. உத்தரப்பிரதேசத்தில் இருப்பதுபோல் அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று நீதிபதி மிஸ்ரா அவர்களின் பரிந்துரையை ஏற்று ஆவண செய்ய வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

காங்கிரஸின் தார்மீகக் கடமை

8. 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தன் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியது. அதை நம்பி முஸ்லிம்கள் வாக்களித்ததால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ரங்கநாத் மிஸ்ரா அறிக்கைக்காக மட்டுமின்றி காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதிக்காகவும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் தார்மீகப் பொறுப்பு கங்கிரசுக்கு உள்ளது என்பதையும் காங்கிரசுக்கு இம்மாநாடு சொல்லிக் கொள்கிறது.

சட்டத்தில் தடை இல்லை

9. முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிக்க சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை என்பதையும் அதற்கான வமுறைகள் எவை என்பதையும் இந்தியாவின் மாபெரும் சட்டவல்லுனர் ரங்கநாத் மிஸ்ரா தெளிவுபடக் கூறியுள்ளார். எனவே சட்ட ரீதியாக எந்தச் சிக்கலும் இல்லாமல் தனி இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்பதை காங்கிரசுக்கு இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

சட்டமாக்க பெரும்பான்மை உள்ளது

10. மேலும் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க காங்கிரஸ் முன் வந்தால் திமுக, இடதுசாரிக் கட்சிகள், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கூட அதைச் சட்டமாக்க ஆதரவு தரும் வாய்ப்பு உள்ளது. பாஜக, சிவசேனா தவிர அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வாய்ப்பு உள்ளதையும் காங்கிரசுக்கு நாம் சுட்டிக் காட்டுகிறோம்.

தள்ளிப்போட எந்தக் காரணமும் இல்லை

11. முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிப்பதைத் தள்ளிப் போட எந்தக் காரணமும் இல்லை என்பதையும், சாக்குப் போக்கு சொல்வதை முஸ்லிம்கள் இனி நம்ப மாட்டார்கள் என்பதையும் முஸ்ம் சமுதாயத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இட ஒதுக்கீட்டை அடையும் வரை ஓய மாட்டோம்

12. 60 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் முஸ்லிம் சமுதாயம் மற்ற சமுதாய மக்களைப்போல் முன்னேற முஸ்லிம்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு வழங்குவதைத் தவிர வேறு கிடையாது என்றும், நாடு முழுவதும் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீடு பெறுவதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய முஸ்லிம் சமுதாயம் தயார் என்றும் இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது.

முஸ்லிம் வாக்குகளை இட ஒதுக்கீடே தீர்மானிக்கும்

13. அடுத்து வரும் தேர்தல் இந்திய முஸ்ம்கள் வாக்களிக்கும்போது தனி இடஒதுக்கீட்டைத் தவிர வேறு எதையும் கவனத்தில் கொள்ள மாட்டார்கள். வேறு எதன் மூலமும் திருப்தி அடைய மாட்டார்கள் என்ற ஒட்டுமொத்த முஸ்ம்களின் குரலை இம்மாநாடு எதிரொக்கிறது.

அனைத்து மாநிலங்களிலும் இட ஒதுக்கீடு

14. முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளித்து வரும் கேரளா, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களை முன்மாதிரியாகக் கொண்டு அனைத்து மாநில அரசுகளும் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

புதுவை ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை

15. 2009 தேர்தன்போது இட ஒதுக்கீடு வழங்குவதாக எழுத்து மூலம் வாக்குறுதி அளித்து விட்டு முஸ்லிம்களைத் தொடர்ந்து ஏமாற்றி வரும் புதுவை அரசை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அடுத்து வரும் தேர்தல் இதற்கான விலையை புதுவை ஆளும் கட்சி கொடுத்தே தீர வேண்டும் என்று இம்மாநாடு புதுவை ஆளும் கட்சியை எச்சரிக்கிறது.

தமிழகத்தில் குளறுபடிகளை சரி செய்க!

16. தமிழக முஸ்ம்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று முஸ்லிம்களில் பிற்பட்டோருக்கு தமிழக அரசு மூன்றரை விழுக்காடு தனி இட ஒதுக்கீடு அளித்தது. முஸ்லிம் சமுதாயம் இதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டாலும், சில அதிகாரிகள் பிற்பட்டோர் பட்டியல் இல்லாத முஸ்லிம்களின் உரிமையைப் பறித்து வருகின்றனர். எனவே பொதுப் பிரிவில் தகுதி உள்ள முஸ்லிம்கள் வாய்ப்பு பெற அதிகாரிகள் குறுக்கே நிற்காதவாறு தமிழக முதல்வர் தெளிவான கட்டளை பிறப்பிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தமிழகத்தில் அதிகப்படுத்துக

17. நாடு முழுவதும் பத்து சதவீத இட ஒதுக்கீடு அளிக்குமாறு ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை கூறியதை கவனத்தில் கொண்டு தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ஏழு விழுக்காடாக உயர்த்தித் தருமாறு இம்மாநாடு தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறது.

திமுக தலைவருக்கு

18. இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், மத்திய அரசில் எதையும் சாதிக்கும் ஆற்றல் மிக்கவருமான தமிழக முதல்வர் மரியாதைக்குரிய கருணாநிதி அவர்கள் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையைச் சட்டமாக்க மத்திய அரசை வயுறுத்துமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது..

பறிக்கப்பட்ட உரிமை

19. வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்டபோது முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கியிருந்தனர். ஆனாலும், வெள்ளையர் களை விரட்டியடிப்பதற்காக ஆங்கிலம் படிக்க மாட்டோம் என்று முஸ்லிம்கள் முடிவு செய்தனர். மேலும், ஆங்கிலேய அரசில் பெற்றிருந்த வேலை வாய்ப்பையும் உதறினர். தேச விடுதலைக்காக முஸ்லிம் முன்னோர்கள் செய்த தியாகத்தால்தான் முஸ்லிம்கள் இன்று பின்தங்கி யுள்ளனர். இதை கவனத்தில் கொண்டு முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கையை ஆள்வோர் பரிவுடன் பரிசீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இட ஒதுக்கீடுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி!

20. முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தேவை என்று பல வகையிலும் குரல் கொடுத்து வரும் அனைத்து கட்சி தலைவர்களையும், சமுதாயத் தலைவர்களையும், இயக்கங்களையும், பத்திரிகைகளையும், எழுத்தாளர்களையும், தனி நபர்களையும் மன நிறைவுடன் இம்மாநாடு பாராட்டுகிறது. அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

சட்டத்திருத்தம் செய்திடு!

21. அரசியல் சட்டத்தின் பிரிவு 15(டி) மற்றும் 16(4) பின்தங்கியஅரசின் கல்வி வேலை வாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் பெறாத வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கியுள்ளது. இதில் வகுப்பினர் என்ற வார்த்தை சிறுபான்மைமக்களைத்தான் குறிக்கும் என்று அரசியல் சாசனம் உருவாக்கும்போது விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், அதற்கு வேறுவிதமான விளக்கம் அளித்து சிலர் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, “வகுப்பினர்என்பதை சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய வகுப்பினர்என்று தெளிவாக திருத்தம் செய்யுமாறு இம்மாநாடு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

بِسْــــــــــــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيم

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
This is Hussain Ali.Msc From Jegatha Pattinam. I studied school education in GHSS school, and I completed Bsc in Jamal Mohamed College-Trichy & completed Msc in Annamalai University-Chidambaram. Now I am working in chennai. ஒரே வரியில் சொல்லுவது என்றால்..... இலக்கின்றி பயணம்....... எதையும் பற்றியும் பற்றாமலும்....

Saddam Hussein صدام حسين

Saddam Hussein صدام حسين