Thursday, December 19, 2013

கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா ஓளிவுள்ளா அவர்களின் கந்தூரிவிழா !!!!

கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா ஓளிவுள்ளா அவர்களின் கந்தூரிவிழா முஸ்லிம், இந்து, கிரித்துவர் என அனைத்து மதத்தினரும் ஓன்று கூடி மிகச்சிறப்பாக நடைபெற்றது. சுமார் 3 லட்சம் மக்கள் கலந்து கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறப்பு பேருந்தாக 15 அரசுபேருந்தும், 10 தனியார் பேருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த வருடம் கட்டுங்கடங்காத கூட்டம் காரணமாக போலீசார் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.


Monday, December 9, 2013

கால்பந்து போட்டி : மாவட்ட அளவில் இரண்டாம் இடம்

மாவட்ட அளவில் இரண்டாம் இடம்

இன்று அரசநரியில் நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்டத்திர்க்கான விளையாட்டு போட்டியில் நமது ஊரை சார்ந்த அல்-முஜா அணி கலந்து கொண்டு மாவட்ட அளவில் கால்பந்து போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளனர்.


போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு தலா 300 ரூபாய் மாவட்ட விளையாட்டு அலுவலர் அவர்கள் வழங்கினார்.


Monday, October 21, 2013

S அபூஹுரைரா திருமண விழா புகைப்படங்கள் ! ! ! !

S அபூஹுரைரா திருமண விழா புகைப்படங்கள் ! ! ! !

நாள் : அக்டோபர் 20th 2013

hussainlink's S Abukuraira Marriage October 20th 2013 album on Photobucket


புகைப்படங்களை பெரிதாக பார்பதற்கு, CLICK  செய்து பார்க்கவும்.

A இம்ரான் கான் திருமண விழா புகைப்படங்கள்

A இம்ரான் கான்  திருமண விழா புகைப்படங்கள் 

நாள் : அக்டோபர் 19th 2013

hussainlink's A Imran Khan Marriage Oct 19th 2013 album on Photobucket



புகைப்படங்களை பெரிதாக பார்பதற்கு, CLICK  செய்து பார்க்கவும்.


ஹஜ் பெருநாள் கூட்டு குர்பானி 2013


நமது ஊரில்  ஹஜ் பெருநாள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டபோது எடுத்த புகைப்படங்கள்:


hussainlink's Haj Perunaal Festival 2013 album on Photobucket



Monday, October 14, 2013

தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள் 2013

அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்; கருத்து வேறுபடாதீர்கள். அவ்வாறாயின் கோழைகளாகி விடுவீர்கள், உங்களின் பலம் குன்றிவிடும். பொறுமையாய் இருங்கள், பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். (8:46)

சகோதர்கள் அனைவருக்கும் மேன்மைமிகு தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Wednesday, October 9, 2013

A இம்ரான் கான் திருமண விழா ! ! ! ! ! !

நண்பர் இம்ரான் கான் ( S/O  மர்ஹூம் அலி அக்பர் ) அவரின் திருமண விழா வரும் அக்டோபர் 19 2013 சனி கிழமை கோட்டைபட்டினம் நிஷா திருமண மண்டபத்தில் நடக்க இருக்கிறது. நண்பர்கள, உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்கள் ஹக்கில் துஆ செய்யவும்.

இடம் : நிஷா திருமண மண்டபம். கோட்டைபட்டினம்  

மணநாள் : அக்டோபர் 19  2013 சனி கிழமை


இவருடைய திருமண புகைபடங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் திருமணத்திற்கு பிறகு இன்ஷா அல்லாஹ் பதிவு செய்யப்படும்.

இவருடைய ( Facebook page ) முகநூல் பகுதி :  https://www.facebook.com/profile.php?id=100001565214236

Thursday, October 3, 2013

கூட்டு குர்பானி 2013

நமது ஊரில் எல்லா வருடம் போல் இந்த வருடமும் கூட்டு குர்பானி க்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சகோதரர்கள் தங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்ளும் படி கேட்டு கொள்ளபடுகிறது.

ஒரு பங்கின் விலை RS 1300/

மேலும் தொடர்ப்புக்கு 

99421 14512             
99421 19265

Friday, September 13, 2013

குடிநீர் (செம்புராணி) குளம் தூர்வாறும் பணி நடைபெறுகிறது

நமது ஊரில் பள்ளிவாசல் குளம் மற்றும் பெண்கள் குளம் தூர்வாறும் பணி நடைபெற்று முடிந்து விட்டது. தற்போது குடிநீர்  (செம்புராணி) குளம் தூர்வாறும் பணி நடைபெறுகிறது.

இது நமது ஊரின் ஜமாஅத் நிர்வாகிகள் முயற்சி செய்து, வேலை நடைபெற்று வருகிறது.

குடிநீர்  (செம்புராணி) குளத்தின் வேலி கரவை முட்கள் செடி அகற்றபற்று :




Thursday, August 22, 2013

மணுநாள் (எ) மக்கள் தொடர்பு முகாம்

நமது ஊரில் கடந்த வியாழகிழமை 22 Aug 2013 மணுநாள் (எ) மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவளர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் மேலும் பலதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். இதில் நமது ஜமாஅத் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. மேலும் முதியோர்களுக்கு முதியோர் உதவி தொகை வழங்கபட்டது. இதில் நமது ஊரை சார்ந்த பயனானிகளும் இருந்தனர்.





முகாமிர்க்கு அருகில் மணுகள் எழுதி கொடுக்க  என்று ஆட்கள் இருந்தார்கள்.ஒரு மணுவிற்க்கு ரூபாய் 25 என கட்டணம் வசூலித்தார்கள்

Tuesday, August 20, 2013

அப்துல்லாஹ் ( எ ) பெரியார் தாசன் அவர்களின் மறுமை வெற்றிக்கு துஆ செய்வோம்

கடவுள் இல்லை என்ற கொள்கையில் இருந்து, பௌத்த மதத்திற்கு சென்று பிறகு, உலக வெற்றிக்கும் மறுமை வெற்றிக்கும் ஒரே மருந்து இஸலாம் மட்டும் தான் என்று உலக தமிழர்களை திரும்பி பார்க்க வைத்து, கடந்த 2010 ஆண்டு பெப்ரவரி மாதம் மக்கா மதினமா நகருக்கு சென்று இஸ்லாத்தை ஏற்றுகொண்ட அப்துல்லாஹ் ( எ ) பெரியார் தாசன் அவர்கள் கடந்த திங்கள் கிழமை அதிகாலை அல்லாஹ்வின் நாட்டப்படி, தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

அன்னாரது ஜனாஸா தொழுகை சென்னை அண்ணா சாலையில் உள்ள மக்கா பள்ளியில் இன்று 20/8/2013 செவ்வாய் கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றது. இதில் அல்ஹம்துல்லாஹ் நானும் கலந்து கொண்டேன். தமிழக தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு அப்துல்லாஹ் அவர்களின் செயல்கள் மற்றும் அவருடைய வாழ்க்கை பற்றி பேசினார்கள். பல்லயாயிர கணக்கான முஸ்லிம் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.










எல்லாம் வல்ல அல்லாஹு அப்துல்லாஹ் ( எ ) பெரியார் தாசன் அவர்களின் மறுமை வெற்றி பெற்றவராக ஆக்கி , எனக்கும், வாசிக்ககூடிய உங்களுக்கும் அல்லாஹு மரணத்தை எல்லா நேரமும் நினைத்து வாழ கூடிய பாக்கியத்தை தந்தருவானாக ஆமின் ! ! ! ! !

இவர் 'கருத்தம்மா' எனும் படத்தில் மிக சிறப்பாக தந்தை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

புகைபடத்தை பெரிதாக பார்க்க படத்தை CLICK செய்யவும்.

Tuesday, August 13, 2013

பள்ளிவாசல் குளம் மற்றும் பெண்கள் குளம் தூர்வாறும் பணி

நமது ஊரில் பள்ளிவாசல் குளம் மற்றும் பெண்கள் குளம் தூர்வாறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக குளங்களை சுற்றி இருந்த வேலி கரவை முட்கள் செடி அகற்றபற்று, பொக்லைன் இயந்திரத்தின்  மூலமாக குளங்கள் தூர்வாறும் பணி நடைபெறுகிறது. 
இதனால் வரும் காலங்களில் குளிக்க தண்ணீர் தட்டுபாடு வரும் வாய்ப்பு குறைவாகும். இப்போது குளிக்க வேறு ஊருகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

இது நமது ஊரின் ஜமாஅத் நிர்வாகிகள் முயற்சி செய்து, வேலை நடைபெற்று வருகிறது.

பள்ளிவாசல் குளத்தின் வேலி கரவை முட்கள் செடி அகற்றபற்று :






பெண்கள் குளத்தின்  தூர்வாறும் பணி :



Wednesday, August 7, 2013

மேன்மைமிகு நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்


அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்; கருத்து வேறுபடாதீர்கள். அவ்வாறாயின் கோழைகளாகி விடுவீர்கள், உங்களின் பலம் குன்றிவிடும். பொறுமையாய் இருங்கள், பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். (8:46)

சகோதர்கள் அனைவருக்கும் மேன்மைமிகு நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள். நாம் இந்த நோன்பில் செய்த அத்தனை அமல்களையும் அல்லாஹ்  ஏற்று கொண்டு, நாம் செய்த தவறுகளை மன்னித்து,  இவுலகில் சந்தோசமான வாழ்க்கை தந்து, இன்ஷா அல்லாஹ் மறுமையில் சொர்க்கத்தில் உயர்ந்த சொர்க்கமான 'ஜன்னத்துல் பிர்தௌஸ்' இல் வாழ கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக ! ! ! ! ! 



ஆமின்


Monday, August 5, 2013

பித்ரா விநியோகம்

சகோதர்கள் கவனதிக்கு 

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது.

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817

நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.

அதன் அடிப்படையில் நமது ஊரில், சென்ற வருடம் போன்று இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும் பித்ரா விநியோகம் செய்யபட உள்ளது. நபர் ஒன்றுக்கு ரூபாய் 100 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள.
செய்யது  த.மு.மு.க 
+91 99424 49265


Tuesday, July 9, 2013

ரமளானை வரவேற்போம் ! ! ! ! !

நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமைமிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான (கடமையான) நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள்.

ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

ரமளான் தரும் 10 பயிற்சிகள்.
1. இறையச்சம்
2. பொருமை
3. சகிப்புத்தன்மை
4.தியாகம்
5. விட்டுக்கொடுத்தல்
6. ஏழைகளின் பசியை உணர்தல்
7. பிறர் நலம் பேணுதல்
8. நல் அமல்களில் ஆர்வம்
9. அர்பனிப்பு
10. ஃபஜ்ரு பாங்குக்கு முன்பே கண்விழித்து பழகுதல்

அல்லாஹ் நம் அனைவருக்கும் இந்த ரமளான் மாதத்தின் நன்மைகள் அதிகம் செய்ய கூடிய ஆர்வத்தையும் ஆசையையும் தந்து, பரிபூரணமாக ஏற்று கொள்வானாக ! ! ! ! ஆமின்.


Wednesday, June 5, 2013

மெஹ்ராஜ் நிகழ்ச்சி ! ! !

நமது ஊரில் இன்று இரவு மெஹ்ராஜ் நிகழ்ச்சி யை முன்னிட்டு,  இரவு சிறப்பு பயாணும், திக்ரு மஜ்லீஸ் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து நாளை வெள்ளிகிழமை ( 7/6/2013 ) வழக்கம் போல், சாப்பாடு செய்து வழங்க பட உள்ளது. 

Tuesday, June 4, 2013

ஜெகதா பட்டினம் தொடர் கிரிக்கெட் போட்டி

ஜெகதை AL MUJAA SPORTS CLUB சார்பில் நடந்தபடும் கிரிக்கெட் போட்டி இன்ஷா அல்லாஹ் திங்கள் கிழமை (03/05/2013) மற்றும் செவ்வாய் கிழமை (04/06/2013) நடைபெற்ற உள்ளது.


இந்த போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு பரிசுகள் வழங்கபட உள்ளது. 


Friday, May 31, 2013

ஜெகதா பட்டினம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்

நமது ஊரில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன், நமது பள்ளி நடுநிலை பள்ளியாக இருந்து உயர்நிலை பள்ளியாக மாறியது நாம் அறிந்தது.



இந்நிலையில், இந்த வருடம் முதல் மாணவர்கள் ( FIRST BATCH ) தேர்வு எழுதினார்கள். இவர்களில் 76% மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

அல்ஹம்துலில்லாஹ்

முதல் 5 இடங்களை பெற்ற மாணவர்கள் :

1. தஸ்னிம் பானு - 411 / 500

2. மந்தன் ராஜ்      -  418 / 500

3. ரகுமா                  -  414 / 500

4.முஹமது அப்துல்லாஹ் - 411 / 500

5. சவுந்தர்யா  - 406 / 500


Friday, May 10, 2013

A அபூபக்கர் திருமண விழா ! ! !


நண்பர் அபூபக்கர் ( S/O அஹ்மத் கனி )  திருமண விழா வரும் மே 22 புதன் கிழமை நமது ஊர் பெரிய பள்ளிவாசலில் நடக்க இருக்கிறது. நண்பர்கள, உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்கள் ஹக்கில் துஆ செய்யவும்.

இடம் :  ஜெகத பட்டினம் பெரிய பள்ளிவாசல்

மணநாள் : மே 22 புதன் கிழமை 2013

இவருடைய திருமண புகைபடங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் திருமணத்திற்கு பிறகு இன்ஷா அல்லாஹ் பதிவு செய்யப்படும்.

Monday, May 6, 2013

M J இம்ரான் கான் திருமண விழா ! ! !

நண்பர்  M J இம்ரான் கான் ( S/O ஜகுபர் ) திருமண விழா வரும் மே 13 திங்கள் கிழமை கோட்டைபட்டினம் நிஷா திருமண மண்டபத்தில்  நடக்க இருக்கிறது. நண்பர்கள,  உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்கள் ஹக்கில் துஆ செய்யவும்.

இடம் :  நிஷா திருமண மண்டபம். கோட்டைபட்டினம்  

மணநாள் : மே 13 திங்கள் கிழமை 2013

இவருடைய திருமண புகைபடங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் திருமணத்திற்கு பிறகு இன்ஷா அல்லாஹ் பதிவு செய்யப்படும்.

Monday, February 25, 2013

சமூக தீமை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்கப் பொது கூட்டம்


இன்ஷா அல்லாஹ் நமது ஊரில் மார்ச் 2 2013 தமிழ்நாடு தௌஹீது ஜமாஅத் (TNTJ) ஜெகதாப்பட்டினம் கிளை சார்பாக நடத்தும் சமூக தீமை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்கப் பொது கூட்டம்


மார்ச் 02 2013 சனிகிழமை மாலை :6 மணி

இடம் :ECR சாலை, ஜெகதாப்பட்டினம்

சிறப்புரை:  அஸ்ரப்தீன் பிர்தௌசீ
தலைப்பு : சத்தியபாதையும் சமுதாய  ஒற்றுமையும்

தாவூத் கைசர்
தலைப்பு : இன்றைய இளைஞனர் நிலை

நஷ்ரப் ஆலிமா
தலைப்பு : சீதனத்தால் சீரழியும் பெண்கள்

மேலும் தொடர்ப்புக்கு :9942286704,9965862773

Friday, January 25, 2013

விஸ்வரூபம் படம் தொடர்பாக ரஜினிகாந்த் வெளிட்டுள்ள அறிக்கை !!!

விஸ்வரூபம் படம் தொடர்பாக ரஜினிகாந்த்  வெளிட்டுள்ள அறிக்கை !!!

Thursday, January 24, 2013

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வேலை ஆள் சேர்ப்பு !!!

சகோதரர்களை பயன்படுத்தி கொள்ளுங்கள் நல்ல வாய்ப்பு மத்திய மாநில அரசுடன் இணைந்து செயல்படும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவணம் பல்வேறு துறைகளுக்கு ஆட்களை பணியில் சேர்க்க உள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.இதற்கு ஆன்லைன் பதிவு 19-1-2013 லிருந்து துவங்குகின்றது. chennaimetrorail.gov.in என்ற இணையதள முகவரில் விருப்பம் உள்ளவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 20-2-2013. 

முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுகிடு உள்ளது


இது குறித்து முழு விபரம் அறிய


http://chennaimetrorail.gov.in/jobposting.php
http://chennaimetrorail.gov.in/Advt-01-2013.pdf




மீலாது விழா நிகழ்ச்சி

தமது பனி சுமையின் காரணமாக சில நாட்களாக செய்திகள் தர முடியவில்லை. 

நமது ஊரில் மீலாது விழா நிகழ்ச்சியாக மௌலீது ஓதப்பட்டு, சீனி வழங்க படுகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும். இதில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொள்கின்றனர்.




بِسْــــــــــــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيم

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
This is Hussain Ali.Msc From Jegatha Pattinam. I studied school education in GHSS school, and I completed Bsc in Jamal Mohamed College-Trichy & completed Msc in Annamalai University-Chidambaram. Now I am working in chennai. ஒரே வரியில் சொல்லுவது என்றால்..... இலக்கின்றி பயணம்....... எதையும் பற்றியும் பற்றாமலும்....

Saddam Hussein صدام حسين

Saddam Hussein صدام حسين