Friday, April 1, 2011

சல்மான் மற்றும் கிப்லா ஆகியோரின் திருமண விழா !

அல்லாஹ்வின் திருபெயரால் ! இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய April 24th நமது நண்பர் சல்மான் பாரிஸ் மற்றும் அவருடைய சகோதரர் கிப்லா கான் ஆகியோரின் திருமணங்கள் நடைபெற இருக்கிறது. ஆதலால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அதை தொடர்ந்து நடைபெறும் விருந்திலும் கலந்து கொண்டு மணமக்களுக்கு துஆ செய்யவும்

இடம்: MKA நிஷா திருமண மண்டபம் கோட்டைபட்டினம்
நாள் : 24/4/2011 Sunday

இவர்களுடைய திருமண புகைபடங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் திருமணத்திற்கு பிறகு இன்ஷா அல்லாஹ் பதிவு செய்யப்படும்

Tuesday, March 29, 2011

வருங்கால முதல்வர் டி.ஆர்.(காலம் 2091-2096)

நான் படித்ததில் பிடித்த நகைசுவையான அடுக்கு மொழி வசனங்கள்

லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை.....



தற்போது வரும் அறிக்கைகளில் சிலர் தங்கள் கோணத்தில் சொல்வதைப் போல நாங்களும் விரட்டப்பட்டவர்களும் அல்ல. விடு பட்டவர்களும் அல்ல. துரத்தப்பட்டவர்களும் அல்ல.


தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்துப் பார்த்து தூரம் தள்ளி நின்றவர்கள். கடந்த காலத்து கசந்த அனுபவங்கள் மறக்க வில்லை. அதனால் இந்த தேர்தல் குறித்து இடைப்பட்ட காலத்தில் நான் வாய் திறக்கவில்லை.

இந்த காலத்தில் அரசியலில் முன்னேறுவதற்கு தேவைப்படுகின்றன சில அடிப்படைத் தகுதிகள். அப்படிப்பட்ட தகுதிகள் இருந்தால்தான் தேர்தலில் கூட கிடைக்கும்போல இருக்கிறது கணிசமான தொகுதிகள். இன்றைய சூழலில் அரசியலில் முன்னேறுவதற்கு தேவை யோகம். மாறாக தேவை இல்லவே இல்லையோ தியாகம்.

ஆம் நாட்டு நடப்பைப்பார்த்தால் அரசியல் ஆகி விட்டது கேலிக்கூத்து. அதிக பட்சத்தினர் பேசுகின்றனர். வரும் இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிக்கும் நாள் ஏப்ரல்-13 வாக்குகளை எண்ணும் நாள் மே-13. இடையில் இருப்பது ஒரு மாசம். எதற்கு இந்த அவகாசம்? எனப் பலர் மனதில் எழுந்தது இந்தக் கேள்வி. எந்த கண்கட்டு வித்தை காரணமாகவும் கண்டு விடக்கூடாதல்லவா தோல்வி.

என இந்த தேர்தலில் இறைவனை நோக்கி நடத்த விரும்புகிறோம் ஒரு வேள்வி. மின்னணு வாக்கு பதிவில் குளறுபடி நடப்பதற்கு இருக்கிறதாம் பல வழிமுறை... ஆகையால் மீண்டும் வர வேண்டும் வாக்குச் சீட்டு முறை... அப்படி ஒரு மாற்றம் வராத வரை இந்திய ஜனநாயகத்துக்கே அதுபெரும் குறை. அமாவாசையன்று மாதத்தில் வான் நிலவுக்கு ஒரு நாள் விடுமுறை. சில நாள் வளர்பிறை.

சில நாள் தேய்பிறை. இந்த சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரையில் எங்களுக்கு இருக்கலாம் தேய்பிறை.

இறைவன் அருளால் வரும் காலத்தில் காண்போம் வளர்பிறை. இந்த தேர்தல் காலம் எங்களுக்கான கோடை விடு முறை. கொள்கையைக் காக்க இதுதான் எனக்கு தெரிந்த நடைமுறை.


தனித்து நின்று தனி ஆவர்த்தனம் வாசிப்போம் என்று சொல்லவும் கூடாது. தண்டவாளம் இல்லாத ஊருக்கு புறப்பட்டு போகவும் முடியாது என்ற சமயோசித முடிவின்படி இந்த சட்ட மன்ற தேர்தலெனும் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆட்டக் காரர்களாக களமிறங்காமல் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க விரும்புகிறோம்’’தெரிவித்துள்ளார்.

ஏய் தண்டகக்கா ! ! ! ஏய் நனக்குனக்கா

بِسْــــــــــــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيم

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
This is Hussain Ali.Msc From Jegatha Pattinam. I studied school education in GHSS school, and I completed Bsc in Jamal Mohamed College-Trichy & completed Msc in Annamalai University-Chidambaram. Now I am working in chennai. ஒரே வரியில் சொல்லுவது என்றால்..... இலக்கின்றி பயணம்....... எதையும் பற்றியும் பற்றாமலும்....

Saddam Hussein صدام حسين

Saddam Hussein صدام حسين